ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - கும்பம்

வலிமையும், திடநம்பிக்கையும் கொண்டிருக்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டுகள் தன ஸ்தானத்தில் ராகுவும், அட்டமஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து பலன் தருவார்கள். 
 
இரண்ரெட்டு ஸ்தானத்தில் ராகு - கேது அமர்வது நாக தோசத்தை தரும் என்பதால் திருமண தடைகளும், பொருளாதார மேன்மையில் சிறு தடையையும் தருவார்கள்.
 
குடும்பத்தில் உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். புதிய திட்டங்களில் இடையூறுகளை உருவாக்கும் என்றாலும், உங்களின் தனாதிபதி குரு வீட்டில் ராகு அமர்ந்து, குருவின் செயல்களை செய்வதால், பணத்தட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
 
முக்கிய காரியங்களில் பிறரின் துணையின்றி செயல்படுவீர்கள். சிலருக்கு மருத்துவ செலவுகள் வந்து மறையும். கடன் படுவது சிலருக்கு வருவாயை பெற்று அடைக்கும் வழிகிடைக்கும்.
 
எட்டாமிடத்து கேது, வீண் அலைச்சலும், காரிய தடைகளும் உண்டாக்கும் என்றாலும், உங்களின் ராசிக்கு நட்பு கிரகமான புதன் வீட்டில் அமர்வதால் பெரிய பாதிப்புகளை தரமாட்டார், இருப்பினும் பிணயமிடுவது, உறுதியளிப்பது.பிறருக்காக எதையும் ஏற்றுக் கொள்வது போன்ற சில காரியங்களைத் தவிர்ப்பதன் மூலம் வரும் கஷ்டத்தை நீக்கி வளம் பெறலாம். 
 
வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சி, உங்களின் சொந்த முயற்சிகள் மூலமாக நடக்கும். பொது வாழ்வில் சிலருக்கு நல்ல பதவி கிடைக்கும். இதன் மூலம் சிலருக்கு வேலை பளுவுடன் இடமாற்றமும் உண்டாகும். உங்களின் தேவைகளுக்கு தகுந்தபடி பொருளாதாரம் நிலை உண்டாகும்.
 
பரிகாரம்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாரியம்மன் வழிபாடும், சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடும், ஞாயிறு கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடும் செய்துவர, உங்களின் வேண்டுதலுக்கு நற்பலன்கள் உண்டாகும்.